• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

இலங்கை கடற்கொள்ளையர்களின் செயலை கண்டிக்கிறேன் – பி.டி.செல்வகுமார்

இலங்கை கடற்கொள்ளையர்களின் செயலை வன்மையாக கண்டிப்பதாக கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பி.டி.செல்வகுமார் கூறியதாவது:

நாகப்பட்டினம் கோடியக்கரை அருகே நேற்று மாலை மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரென இரண்டு பைபர் படகில் வந்த 6 இலங்கை கடற்கொள்ளையர்கள் 5 மீனவர்களையும் சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதில் ஆனந்த், முரளி சாமிநாதன், வெற்றிவேல் அன்பரசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் அவர்களிடமிருந்த 2 லட்ச ரூபாய் மதிப்பிலான 2 செல்போன்கள், வாக்கி டாக்கி, GPS, எக்கோ சவுண்டர், பேட்டரி உள்ளிட்டவைகளை கடற்கொள்ளையர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
கடற்கொள்ளையர்களின் இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு உடனடியாக நிரந்தர தீர்வு காண வேண்டும். பாதிக்கப்பட்ட ஏழை மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.