நீலகிரி மாவட்டத்தின் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி இரண்டாம் நாளாக இன்று நடைபெற்று வருகிறது.

உள்ளூர் மக்கள் மற்றும் இன்றி வெளி மாவட்ட , மாநில சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாய் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இரண்டாம் நாள் நடந்த 13-வது காய்கறி கண்காட்சியை ஆயிர கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.
இதில் 2.50 டன் காய்கறிகளால் ஆன மயில், எட்டடி உயரம் கொண்ட ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் காளையன், வண்ணத்துப்பூச்சி, ஜோடி கிளிகள், வரையாடு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை,புலி, தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது உள்ளது.
பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிக்கள் இந்த காய்கறி கண்காட்சியை காண வருகை தந்துள்ளனர்.

இங்க அமைக்கப்பட்டுள்ள காய்கறிகளான பல்வேறு வடிவங்களில் முன்பு நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் இன்று மாலை 3 மணியளவில் சிறந்த காய்கறி வடிவமைப்பிற்கான பரிசளிப்பு விழா ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமையில் நடைபெறவுள்ளது.