விழிஞ்சம் துறைமுகம் திறப்பு. கேரள மாநில அரசின் கனவு திட்டமான விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்தார். ரூ. 8,900 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
விழிஞ்சம் துறைமுகம் திட்டம் கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியின் போது, அன்றைய கேரள முதல்வர் உம்மன் சாண்டி காலத்தில், தனியார் துறைமுகத்திட்டத்திற்கு கையெழுத்து இடப்பட்டது.
கேரளாவில் எந்த கட்சியின் அரசு ஆட்சி என்றாலும் மலகளை சிதைத்து மாநிலத்தின் முன்னேற்றம் என்றாலும் வேண்டாம் என்பது கேரளாவில் எந்த அரசு ஆட்சி செய்தாலும் அரசின் திட்டமாக செயல்படுகிறது.

குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மலையை உடைத்து விழிஞ்சம் கடலில் கொட்டி கட்டப்பட்ட விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இந்த திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர், விழிஞ்சம், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கும் என்றும், புதிய சகாப்தத்திற்கான வளர்ச்சிக்கான ஒரு முன்மாதிரியாகும். இதன் மூலம் நாட்டின் பணம் வெளிநாடுகளுக்குச் செல்வது தடுக்கப்படும் என்றார்.

நிகழ்வில் திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதருண் பங்கேற்றது. காங்கிரஸ் கட்சியின் பொதுப்பார்வையின் தன்மை என கூட்டத்தில் இருந்து எழுந்த கருத்து செய்தியாளர்கள் செவி மடுத்தனர்.