தமிழ்நாடு முழுவதும் இன்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி எல் ஏ ரவுண்டானா அருகே சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற இருக்கும் என அறிவித்த நிலையில் அதற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது சங்கத்தின் நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகள் தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக காலி பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும். ஊழியர் உதவியாளர்களின் பணி சுமையை குறைத்து குழந்தைகளுக்கு முன் பருவ கல்வி நடத்துவதற்கு அரசு முன்வர வேண்டும். பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்டபடி மே மாதம் 15 நாள் விடுமுறையை ஒரு மாதமாக வழங்க வேண்டும். ஒரு மையத்தில் இருந்து முதன்மை மையங்களுக்கு சென்று ஊழியர்களுக்கு ஒரு இன்கிரிமெண்ட் வழங்க வேண்டும்.
அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர் ஆக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் பணி ஓய்வு பெறும் பொழுது அவர்களுக்கு பணிக்கொடையாக 10 லட்சம் வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தடையை மீறி ஆர்ப்பாட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போலீஸ் குவிக்கப்பட்டு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.