• Sun. Sep 20th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

புதுச்சேரி – புதிய பேருந்து நிலையம் திறப்பு..,

ByB. Sakthivel

May 2, 2025

புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் ராஜீவ்காந்தி புதிய பேருந்து நிலையம் இயங்கி வந்தது. பழமையான இந்த பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹29.55 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையமாக கட்டப்பட்டது.

4 ஏக்கர் பரப்பளவு கொண்ட பேருந்து நிலையத்தில் 46 பஸ்கள் நிறுத்தமும், 31 கடைகள் உட்பட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். தொடர்ந்து புதிய கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து முதலமைச்சர் ரங்கசாமி,

புதுச்சேரியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பொலிவுரு நகர திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் தற்போது திறக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறியவர், ராஜீவ் காந்தி முதல் இந்திரா காந்தி சிக்னல் வரையிலும் மேலும் கடலூர் சாலையில் ரயில்வே மேம்பாலமும் விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாகவும், உப்பனாரு வாய்க்கால் மேம்பால பணி நடைபெற்று வருவதால் அந்த பணிகளும் விரைவில் முடியும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.