மதுரை தெற்கு மாவட்ட திமுக அவனியாபுரம் கிழக்கு பகுதி திமுக இளைஞரணி சார்பாக மக்களின் தாகம் தீர்க்கும் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு நொங்கு, இளநீர் தண்ணீர் பழம் வெள்ளரிக்காய், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சிந்தாமணி பகுதியில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆணைக்கிணங்க அவனியாபுரம் கிழக்கு பகுதி இளைஞரணி ராஜா என்ற ராம்ராஜ் ஏற்பாட்டில் திராவிட மாடல் வெர்ஷன் 2.0 லோடிங் என்று திமுக இளைஞரணி சார்பில் இன்று முதல் தொடர்ந்து இருபது நாட்களுக்கு பொதுமக்களில் பாகத்தை தணிப்பதற்காக சிந்தாமணியில் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் இளநீர், நோங்கு, தண்ணீர் பழம், ரோஸ் மில்க், சர்பத் பாட்டில் குளிர்பானங்கள் பொது மக்களுக்கு வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது.
மதுரையில் சித்திரை வெயில் பிளந்து கட்டி வரும் நிலையில் திமுகவினரின் இந்த செயல் பொதுமக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது மேலும் இதில் 41வது வட்டக் கழக செயலாளர் கரு ஆறுமுகம் 87 வட்டச் செயலாளர் எம் போஸ் 89 வட்டக் கழகச் செயலாளர் சரத் சிந்தாமணி சரவணன் மற்றும் அவனியாபுரம் கிழக்கு பகுதி நிர்வாகிகள் மற்றும் 87 வட்டக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.