• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

மீனாட்சி அம்மனை பார்க்க வந்த இஸ்லாமிய பெண்!

ByKalamegam Viswanathan

May 2, 2025

மதுரை சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

மதுரை சித்திரை திருவிழா துவங்கிய நாள் முதல் தினமும் காலை மற்றும் மாலை என இரு வேலைகள் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரர் பிரியா விடை உடன் மாசி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். நேற்று மூன்றாம் நாள் மாசி வீதிகளில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலிக்க வந்த போது மீனாட்சி அம்மனை பார்க்க காத்திருந்த இஸ்லாமிய பெண் தனது கைக்குழந்தையுடன் காத்திருந்தார். அப்பொழுது அங்கு நின்ற மாணவி குழந்தைக்கு தாமரை மாலை அணிவித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.