பெரம்பலூர் மாவட்டம் வடக்கலூர் கிராமம் கத்தாழை மேடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கருப்பையா என்பவர் கத்தாழை மேட்டில் தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கிடையில் தனது 68 ஆடுகளையும், அடைத்து விட்டு இரவு சுமார் 7.15 மணியளவில் வீட்டிற்கு சாப்பிட சென்றதாகவும், மீண்டும் இரவு 09.30 மணிக்கு சென்று பார்த்த போது, கிடையில் அடைத்து வைத்திருந்த 68 ஆடுகளையும் காணவில்லை என்று மங்களமேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மங்களமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் இவ்வழக்கு தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி மங்களமேடு காவல் ஆய்வாளர் பாலாஜி அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை செய்ததில் மேற்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வெங்கவாடி குடியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜி என்பவரின் மகன்களான இளங்கோவன் (29) மற்றும் பிரபு (26) ஆகிய இருவரும் என்பது விசாரணையில் தெரிய வர மேற்படி எதிரிகளை கைது செய்து வழக்குப் பதிவு செய்து அவர்களிடமிருந்து காணாமல் போன 68 ஆடுகளையும் பறிமுதல் செய்த தனிப்படையினர் மேற்படி எதிரிகள் இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.