கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் இடியுடன் கூடிய கோடை மழை பெய்தது.
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக இன்று காலை முதல் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதிய நேரத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
குறிப்பாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அரவேனு, டானிங்டன், கட்டபெட்டு , ஒரசோலை, கோடநாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. இதனால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது.