விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் அழகாபுரியன் தலைமை தென்றல் நகர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தெற்கு அண்ணா நகர்
தெற்குவேங்காநல்லூர் சுந்தர்ராஜபுரம் ஆகிய நான்கு பகுதிகளில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் உன்னால் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே டி ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்பொழுது பேசிய முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி எட்டாத கனிக்கு கொட்டாவி விடுவது திமுக அரசு தமிழகத்தில் 2026 ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளை பிடிப்போம் என திமுக அரசு பூச்சாண்டி காட்டுகிறது. மக்கள் அதிமுக பக்கம் தான் உள்ளனர். 2026-ல் எடப்பாடி முதலமைச்சர் ஆவது உறுதி அதிமுக தான் ஆட்சி அமைக்கும்
நமது கட்சி வெற்றி பெற வேண்டுமானால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் கழக நிர்வாகிகள் பாகுபாடு இன்றி உழைக்க வேண்டுமென நிர்வாகிகள் மத்தியில் கோரிக்கை முன்வைத்து பேசினார் இந்த கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் என் எம் கிருஷ்ணராஜ் வடக்கு நகரச் செயலாளர் துரை முருகேசன் தெற்கே நகர செயலாளர் பரமசிவம் ஒன்றிய செயலாளர் ஆர் எம் குருசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.