புதுக்கோட்டை மாவட்டம் சீனிவாசன் நகர் 2-ஆம் வீதியில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ செல்வ விநாயகர் இரண்டாம் ஆண்டு ஜிர்ணோத்தாரன கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழாவில் இரண்டு தினங்களாக நடைபெற்ற விக்னேஸ்வர பூஜை புண்ணியகால வாகனம் கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் லட்சுமி ஹோமம் ஆகிய ஹோமங்கள் நடைபெற்று இரண்டாம் கால பூஜை நடைபெற்ற முடிவற்ற நிலையில் அதன் பிறகு கடம் புறப்பாடு யாகசாலையில் இருந்து வேதாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் சொல்லப்பட்டது.
புனித நீர் எடுத்துச் கோயில் வளாகம் சுற்றி வந்து வானத்தில் கருட பகவான் வட்டமிட்டு சரியாக 9.30 மணியளவில் கோயில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. சீனிவாச நகரை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு ஸ்ரீ செல்வ விநாயகர் அருள் பெற்று சென்றனர் அதன் பிறகு சாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றது.