திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளரை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். இச்சம்பவம் சிவகங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளரான பிரவீன் குமார் இன்று மதியம் தனது சொந்த ஊரான சாமியார் பட்டியலில் உள்ள தனது தோப்பில் இருந்தபோது, ஐந்துக்கும் மேற்பட்ட மர்ம கும்பல் திடீரென வந்து பிரவீன் குமாரை சரமாரி வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ள கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசுத்த மருத்துவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்ததாக தெரிவித்தன. இதனை அடுத்து உடல் கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளன. இறந்தவரின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் மருத்துவமனைக்கு வருவதாலும் திமுக நிர்வாகிகள் வருவதாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த அதிக அளவு போலீசரும் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் தப்பி ஓடிய கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றன. ஆளும் கட்சியின் மாவட்ட அளவிலான பொறுப்பில் இருக்கும் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.