• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

த.வெ.க தலைவர் நடிகர் விஜய் சென்னை விமான நிலையம் வருகை..,

ByPrabhu Sekar

Apr 26, 2025

முதல் வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு இன்றும் நாளையும் கோயம்புத்தூர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள எஸ்.என்.எஸ். கல்லூரி அரங்கில் நடைபெற உள்ளது இந்த மாநாட்டில் மேற்கு மண்டல மாவட்டங்களான கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 7 மாவட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

ஒருபக்கம் உறுப்பினர் சேர்க்கை நடந்து வரும் நிலையில் தேர்தல் சமயத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் பலமே வெற்றியை நிர்ணயிக்கும் என்பதால் அதில் விஜய் ஆர்வம் காட்டி வருகிறார்.

இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களை 5 மண்டலங்களாக பிரித்து வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளார்.

இதில் முதல் மாநாடாக கோயம்புத்தூரில் இன்று நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்துள்ளார்.

இன்னும் சற்று நேரத்தில் சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் புறப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.