பார்த்தீனியம் என்னும் களைச்செடி ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து ரயில் நிலையம் செல்லும் பாதையில் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பார்த்தீனியம் என்னும் களைச்செடி 1950 ஆம் ஆண்டில் அமெரிக்கவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்யப்பட்ட போது அதனுடன் வந்ததாக தெரிகிறது. அது படிப்படியாக நமது நாடு முழுவதும் பரவி அணைத்து பகுதியில் வளர்ந்துள்ளது.
கருவேல மரங்களை அழிக்க நாம் எவ்வளவு முயன்றாலும் மீண்டும் மீண்டும் அவை வளர்வது போல் பார்த்தீனியம் செடியும் மிக எளிதாக பரவி வளரக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளது.

பார்த்தீனியம் செடி அடிப்படையில் களை ச்செடியாக அறியப்பட்டாலும் பல வகையான கேடுகள் விளைவிக்க கூடிய செடியாக இருப்பதாக வேளாண்மை அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். பார்த்தீனியம் செடியை உட்கொள்ளும் கால்நடைகள் மூலம் கிடைக்கக்கூடிய பாலை குடிப்பதால் மனிதர்களுக்கு செரிமான பிரச்சனை, ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
பார்த்தீனியம் செடி மனித உடலில் பட்டால் அரிப்பு, தோல் தடிப்பு ஒவ்வாமை, சுவாச பிரச்சனை ஏற்படுகிறது. எனவே உடனடியாக பார்த்தீனியம் செடிகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.