சிவகங்கை மாவட்டம் சிவகங்கை யில் ‘நகராட்சிநிர்வாகம் சார்பாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மருது பாண்டியர் பூங்காவில் கோடைகாலத்தை முன்னிட்டு கோடை திருவிழா இரண்டாம் ஆண்டுகொண்டாட்ட நிகழ்ச்சி ஏப்ரல் 25 முதல் துவங்கி மே4 வரை தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற உள்ளது .

இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று மாலை நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணா ராவ் தலைமையில் நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த் துவக்கி வைத்தார். பூங்காவில் கண்ணைக் கவரும் வகையில் வண்ண வண்ண, விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறுவர் சிறுமியர்கள் கோடை விடுமுறையை கொண்டாடி மகிழும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் விளையாடி மகிழ ராட்டினம், சறுக்கு விளையாட்டு, என பல வகைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
முதல் நாளானநேற்று குழந்தைகளின் கண்ணைக் கவரும் வகையிலான நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி பணியாளர்கள் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.