நீலகிரி மாவட்டம் உதகை ராஜ் பவன் பல்கலைக்கழகம் துணைவேந்தர் மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இந்த இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஆளுநர் ரவியை கண்டித்து பல்வேறு கட்சிகள் ஆளுநருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக உதகை மத்திய பேருந்து நிலையம் முன்பாக தந்தை பெரியார் திராவிட கழகம் மற்றும் தமிழ் புலி கட்சியினர் விடுதலை சிறுத்தை கட்சியினர், மக்கள் அதிகாரம் , ஆதி தமிழ் பேரவை போன்ற 500க்கும் மேற்ப்பட்ட பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து மத்திய பேருந்து நிலையம் அருகில் ஆளுநர் ஆர் என் ரவிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக கைது செய்தனர் ஆளுநர் எதிராக நடைபெறும் போராட்டத்தால் உதகையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.