• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Apr 25, 2025

பேச்சுத்திறமை என்பது சரியான இடத்தில சரியான சமயத்தில்
சரியாகப் பேசுவது மட்டுமல்ல. தவறான வார்த்தைகளைப் பேசிவிட வேண்டும் என்று மனம் துடிக்கும்போது பேசாமல் இருப்பதும் தான்.

நீ வாயைத் திறக்கும் போதெல்லாம்
உன் உள்ளத்தைத் திறக்கிறாய்
ஆகவே
கவனமாக இரு.

கோபத்தில் நாக்கு வேலை செய்யும் அளவுக்கு மூளை வேலை செய்வது இல்லை.

குறை சொல்பவர்களுக்கு விளக்கம் சொல்லி நேரத்தை
விரையம் ஆக்காமல், அவர் அவர் மனம் போல் எண்ணிக் கொள்ளட்டும் என்று எண்ணி நகர்ந்து விடுவது தான் நல்லது.

அறிவுரை என்பது நாம் செய்யாததை அடுத்தவர்க்குக் கூறுவது.
அனுபவம் என்பது தவறுகளை திருத்திக்கொள்வது.
ஆணவம் என்பது தவறுகளை நியாயப்படுத்துவது.

ஆணவம் வாழ விடாது.
அனுபவம் வீழவிடாது.

வாழ்க்கையில் உயர பறக்க
நினைப்பது தவறல்ல.
உடனே பறக்க
நினைப்பதுதான் தவறு.

புரிதல் இல்லாத இடத்தில்
நீங்கள் பரிந்து பேசினாலும்,
பாசத்தில் பேசினாலும்….
அது பலவந்தமாகத் தான் தோன்றும்.

நகரும் முள் தான் மணியைக் காட்டும்,,,
தேய்ந்தப் பின் தான் நிலா முழுமை ஆகும்…
காயந்த சருகும் உரமாய்ப் போகும்…
தயக்கம் உதறு காலம் மாறும்.

தோல்வி ஓட ஓட துரத்தினாலும், நீ ஓட்டத்தை நிறுத்தி விடாதே.
இடையே வரும் தோல்வியும் தடையும், வெற்றியின் ஆரம்ப படிநிலைகள்!

வாழ்க்கையில் தடைகள் வந்தால் தோல்வி உறுதி அல்ல, தடைகளை கண்டு பின் வாங்கினால் தோல்வி உறுதி!

பிறரை நம்புங்கள் உயர்வதற்கு வாய்ப்புகளை நம்புங்கள் முயல்வதற்கு,
சவால்களை நம்புங்கள் வளர்வதற்கு,
உங்களை நம்புங்கள் வாழ்வதற்கு….