தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சில நாட்களுக்கு முன்பு பெண்களை இழிவுபடுத்தி பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது கட்சி பொறுப்பில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் விடுவித்திருந்தார். ஆனால் அவர் அமைச்சராக தொடர்ந்து வருகிறார்.

பெண்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் அமைச்சர் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரி இன்று உதகை ஏடிசி பகுதியில் நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது அமைச்சர் பொன்முடியின் உருவப்படத்தை கட்சியின் பெண் தொண்டர்கள் செருப்பால் அடித்து கிழித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.