ஆட்டோவில் ஏறிச்சென்ற தனது மனைவியை காணவில்லை என ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சிசிடிவி காட்சிகளுடன் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட பொழிச்சலூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவி வகித்து வருபவர் ஜோசப். இவரது மனைவி டெய்சி ராணி வயது 41 .
கடந்த 21ஆம் தேதி வீட்டில் இருந்த இளைய மகனை படிக்க சொல்லியபோது தாய் மகன்களுடன் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்ட தாய் அங்கிருந்து ஒரு ஆட்டோவில் ஏறிச் சென்றுள்ளார் .
ஆட்டோவில் ஏறிய அந்த நிமிடத்தில் இருந்து தனது மனைவியை காணவில்லை என சங்கர் நகர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட துணைத் தலைவர் ஜோசப் என்பவர் புகார் அளித்துள்ளார் .
அது மட்டும் இல்லாமல் இரண்டு நாட்களாகியும் தனது மனைவியை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலை இருப்பதால், ஆட்டோ ஓட்டுரை கண்டுபிடித்தால் தனது மனைவி கிடைத்து விடுவார்கள் என புகாரில் தெரிவித்துள்ளார்.