சென்னை டீம் நல்ல டீம், சரியாக ஆடவில்லை என்பது உண்மைதான். வரும் போட்டிகளில் நன்றாக ஆடுவார்கள் என நம்பிக்கை உள்ளது என புதுச்சேரியில் கிரிக்கெட் அகாடமி துவக்க விழாவில், சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பங்கேற்று தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே கிரிக்கெட் ஆர்வத்தை ஊக்கப்படுத்த சூப்பர் கிங்ஸ் அகாடமி நிறுவப்பட்டு, உலககெங்கிலும் 25க்கும் மேற்பட்ட சூப்பர் கிங்ஸ் அகாடமி கிரிக்கெட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகின்றனது. இந்நிலையில் புதுச்சேரியில் சூப்பர் கிங்ஸ் அகாடமியின் முதல் பயிற்சி மையம் மூலக்குளம் பகுதியில் உள்ள தனியார் ( StandsFord) பள்ளியில் திறக்கப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ருத்துராஜ் கைக்வாட் , சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்று கிரிக்கெட் அகாடமியை திறந்து வைத்தனர். திறப்பு விழாவில் புதுச்சேரி ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன்குமார், சட்டமன்ற உறுப்பினர் சிவ சங்கரன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை டீம் நல்ல டீம், சரியாக ஆடவில்லை அது உண்மைதான் வரும் போட்டிகளில் நன்றாக ஆடுவார்கள் என நம்பிக்கை உள்ளது என புதுச்சேரியில் கிரிக்கெட் அகாடமி துவக்க விழாவில் சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.