• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கம்பம் சந்திப்பு நிகழ்வு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கம்பம் சந்திப்பு 20வது நிகழ்வு நடைபெற்றது. நிகழ்விற்கு மாநில செயற்குழு உறுப்பினர், எழுத்தாளர் தேனி சுந்தர் தலைமை வகித்தார். ஆசிரியர் செந்தில் குமார் வரவேற்றுப் பேசினார். கவிஞர் இதய நிலவன் எழுதிய “ஓரெண்டே ரெண்டே” நாவல் குறித்து ஆசிரியர், கிளை பொருளாளர் கௌசல்யா, ரெய்ச்சல் கார்சன் எழுதிய உலகப் புகழ் பெற்ற சூழலியல் தொடர்பான நூலான “மௌன வசந்தம்” குறித்து கிளைச் செயலாளர் திலீபன் ஆகியோர் பேசினர்.

மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன் விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசினார். தொடர்ந்து நூல் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. நூலாசிரியர் கவிஞர் இதய நிலவன் ஏற்புரை வழங்கினார். எழுத்தாளர் இராஜிலா ரிஸ்வான், மணியரசன் உட்பட அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். செயற்குழு உறுப்பினர் நித்தியானந்தன் நன்றி கூறினார்.