மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொன்முடியை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து மாவட்ட மகளிர் அணி செயலாளரும் , அதிமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினருமான மா சக்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ் பவுன்ராஜ் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
தொடர்ந்து சைவம் வைணவம் என்று பெண்களை இழிவுபடுத்தும் வகையில் திமுக அமைச்சர் பொன்முடி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , உடனடியாக பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து விலக்கி கைது செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இதனை செய்ய தவறிய திமுக அரசை கண்டித்தும் பெண்கள் உட்பட ஏராளமானோர் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினர்.