மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூர் கிராமத்தில் வந்தா வெட்டுவோம் தலை முடியை என்ற பெயரில் புதிய முடி திருத்தும் நிலையம் துவக்கப்பட்டது. 25 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நவாஸ் அகமது என்பவர் இந்த கடையை துவக்கி உள்ளார்.

ஏற்கனவே இவருக்கு சொந்தமாக மயிலாடுதுறையில் ஒரு முடிவெட்டும் நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், இரண்டாவதாக தனது சொந்த கிராமத்தில் முடிவெட்டும் நிலையத்தை திறந்து உள்ளார். திறப்பு விழா சலுகையாக முதல் நூறு நபர்களுக்கு ஒரு ரூபாய்க்கு சலுகை விலையில் முடி வெட்டும் கட்டணத்தை அறிவித்துள்ளார். இதனை எடுத்து ஏராளமான நபர்கள் ஒரு ரூபாய் கொடுத்து தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.
முடி வெட்டுவதற்கு தனியாக தொழிலாளர்களை பணியமத்தியுள்ள நவாஸ் ஆகும்போது வேதியல் துறையில் படித்து பட்டம் பெற்ற நபர் என்பதும், வெளிநாட்டு கம்பெனிகள் வேலை பார்த்து வந்து தற்போது சொந்த தொழில் செய்வதற்காக ஊருக்கு திரும்பியதும் குறிப்பிடத்தக்கது.