விருதுநகரில் பெண்களை இழிவுபடுத்தி பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி விலக கோரி, கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் கே. டி .ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
பெண்களை ஆபாசமாக பேசிய திமுக அமைச்சர் பொன்முடியை பதிவி விலக வலியுறுத்தி அதிமுக மேற்கு மாவட்ட கழகம் சார்பில், முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெண்களை அருவருக்க வகையில் திமுக அமைச்சர் பொன்முடி உட்பட மற்றவர்களும் தொடர்ந்து பேசி வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் இதனை பார்த்தும், பார்க்காதது போல் இருக்கிறார். மகளிர்க்கான இலவச பஸ் விடப்பட்டு அதில் ஏறும் பெண்களை அமைச்சர் பொன்முடி ஓசியில்தானே பயணம் செய்பவர்கள் என பொதுக்கூட்டத்தில் கேவலமாக பேசியிருக்கிறார்.
திருட்டு திமுக பொன்முடி நாய்க்கும், தாய்க்கும் வேறுபாடு தெரியாத தறுதலை பொன்முடி பதவியில் இருந்து விலக வேண்டும். விடியா திமுக ஆட்சியை பார்த்து தமிழகம் சந்தி சிரித்து வருகிறது. நாக்கு தடித்த நாதாறி பொன்முடி உடனடியாக பதவி விலகு, பதவி விலகு. பெண்களை இழிவுபடுத்தி ஆட்சி செய்யும் திமுகவை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர். ஆட்சி மாற்றம் அவசியம் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்துள்ளனர் என பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட பொது கமிட்டி பொறுப்பாளர் ஜான் மகேந்திரன், விருதுநகர் மாவட்ட அவை தலைவர் விஜயகுமாரன், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், முன்னாள் எம்எல்ஏ சந்திர பிரபா, ஒன்றிய செயலாளர்கள் மச்சராஜா, கண்ணன், தர்மா,விருதுநகர் நகர செயலாளர் வெங்கடேஷ், முன்னாள் நகர செயலாளர் முகமது நயினார்,பாசறை சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
