கரூரில் அமைந்துள்ள ARS குரூப் ஆஃப் காலேஜ் என்ற நர்சிங் கல்லூரியில் பயின்று முடித்த முன்னாள் மாணவிகள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர், பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற கல்லூரி என்றும் 100% அரசு வேலை உறுதி என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய கல்வி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அங்கு கல்வி பயின்ற மாணவிகள் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு கொடுத்தனர்.
இந்த புகார் மனு குறித்து மாணவிகள் தெரிவித்ததாவது..

நாங்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள்.12 வகுப்பு முடித்திருந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அபுல் ஹசேன் என்பவர் எங்களின் பெற்றோர்களை கைபேசி எண்ணில் அழைத்து, தான் ARS குரூப் ஆஃப் காலேஜ் என்ற நர்சிங் கல்லூரி நடத்தி வருவதாகவும், அதில் உங்கள் மகளை சேர்த்து படிக்க வைத்தால் நூறு சதவிதம் அரசு வேலையும் மற்றும் தனியார் துறைகளில் அவருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் படித்து முடித்ததும், முதல் இரண்டு ஆண்டுகளுக்கு BSS சான்றிதழ்களும், மூன்றாம் ஆண்டு படித்ததற்கு பல்கலைக்கழகத்தின் சான்றிதழ்களும் தருவதாக ஆசை வார்த்தைகளை கூறியதால் எங்களின் பெற்றோர்கள் அந்த கல்லூரியில் சேர்த்து வைத்தனர்.
அவர் கூறியவை அனைத்தும் உண்மை என்று நம்பிய நாங்களும் அவர் வற்புறுத்தலுக்கு இணங்கி அவரின் கல்லூரியில் சேர்ந்தோம். சேர்ந்த பிறகு ஒவ்வொன்றாக எங்களுக்கு தெரிய வந்தது சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் சுகாதார வசதிகள் இல்லாமலும், முறையாக பயிற்றுவிக்க ஆசிரியர்களும் இல்லாமலும், முறையான பயிற்சியும் சரிவர கொடுக்கவில்லை. இருந்தும் அவற்றை சகித்துக் கொண்டு கல்லூரி படிப்பினை 2022 ஆம் ஆண்டு முடித்தோம். 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு BSS சான்றிதழ்கள் கொடுத்தார். ஆனால், 2021 முதல் 2022 படித்த மூன்றாம் ஆண்டுக்கு அவர் தருவதாக சொன்ன பல்கலைக்கழகத்தின் சான்றிதழ்களை தரவில்லை. மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவர் ஏதாவது காரணங்களை சொல்லி தட்டிக் கழித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் இரண்டு ஆண்டுகளுக்கு கொடுத்த BSS சான்றிதழ்களை வைத்துக்கொண்டு எங்களால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியவில்லை. பதிவு செய்ய மறுக்கிறார்கள். தனியார் எங்கிலும் வேலை சேரலாம் என்றாலும் மூன்றாம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் சான்றிதழ்கள் இருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். அதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிப்பதோடு, படித்து முடித்து நல்ல வேலையில் சேரலாம் என்ற கனவும் பொய்த்து போனது.
இதே புகார் சம்பந்தமாக முன்பு தங்களிடம் ஒரு மனு கொடுத்திருந்தோம் அதுவும் விசாரணையில் இருக்கிறது. அப்போதும் எங்களுக்கு பல்கலைக்கழகத்தின் அழைக்களித்து வருகிறார். அவரிடம் சான்றிதழ்களை தராமல் இருந்து மூன்றாண்டு பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு சான்றிதழ்களைப் பெற்றுத்தந்து,, இது போன்ற பொய்யான தகவல்களை கூறி மாணவர்களின் வாழ்வோடு விளையாண்டு கொண்டிருக்கும் ARS கல்வி நிறுவனத்தின் நிறுவனர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தனர். கல்வி நிறுவனம் தங்களை ஏமாற்றியதாக மாணவிகள் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.













; ?>)
; ?>)
; ?>)