விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்துராஜபுரம், கட்டளைபட்டி, பூலாவூரணி, பெரிய பொட்டல்பட்டி, உள்ளிட்ட பகுதியில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலாஜி தலைமை வகித்தார் ,ஆணையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி நாராயணன், பலராமன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிலிப்பாசு வரவேற்று பேசினார்.

பெரியபொட்டல் பட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே டி ராஜேந்திர பாலாஜிக்கு வானவேடிக்கை மற்றும் ஆளூயர மாலை அணிவித்து வரவேற்றனர்.
முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேசியது,
மாணவர்களுக்கு அதிமுக ஆட்சியில் இலவச மடிக்கணினி திட்டத்தை பயன்படுத்தி ஏராளமானோர் படிப்பிலும் வாழ்விலும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். அந்தத் திட்டத்தை திமுக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நான் அமைச்சராக பொறுப்பேற்று அனைத்து இடங்களிலும் தார் சாலைகள் புதிதாக தரமாக அமைக்கப்பட்டு போக்குவரத்திற்கு எளிதாக்கப்பட்டது .
ஆனால் திமுக ஆட்சியில் தார்சாலை பராமரிக்கப்படாததால் குண்டும் குழியுமாக மாறிவிட்டன. இதனால் வாகன ஓட்டிகள் தினமும் சிரமப்பட்டு வருகின்றனர். தார் சாலைகளை கூட பராமரிக்கப்படாமல் திமுக கண்டுகொள்ளாமல் உள்ளது. இதனால் மக்கள் வேதனையில் உள்ளனர்.
மேலும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் விருதுநகர் மாவட்டம் முழுவதும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது திட்டத்திற்கு அமைச்சர் என்கிற முறையில் முக்கியத்துவம் கொடுத்து குக்கிராமங்களுக்கும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் முழுமையாக வழங்கப்பட்டது .ஆனால் திமுக ஆட்சியில் கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பராமரிக்கப்படாதால் தண்ணீர் பல இடங்களில் வீணாகி வருகின்றன. இது அந்தந்த பகுதி ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் நன்கு தெரியும் பொது மக்களுக்கும் தெரியும்.
தண்ணீர் வீணாகி வருவதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலையில் உள்ளன.
இதற்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டு வார்கள். மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கக் கூடிய அரசாக அதிமுக இருக்கும் முதலமைச்சராக எடப்பாடி பொறுப்பேற்று நல்லாட்சி வழங்குவார் என பேசினார்.
முன்னதாக அதிமுக மேற்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் ஜான் மகேந்திரன் பூத் கமிட்டி உறுப்பினர்களை அறிமுகப்படுத்தி பேசினார்.