22 ஆண்டுகளாக தமிழக அரசு மதுபானக் கடைகளில் பணிபுரிந்து வரும் அனைத்து டாஸ்மாக் (TASMAC) ஊழியர்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக, டாஸ்மாக் கூட்டமைப்பை சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள், சிவகங்கை அரண்மனை வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரப் பணிக்கு நியமிக்க வேண்டும். அரசு ஊழியர்களைப் போல டாஸ்மாக் ஊழியர்களுக்கும் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும். தற்போதைய மருத்துவ திட்டத்தை நீக்கி, ஐ.எஸ்.ஐ (ESI) மருத்துவ திட்டத்தை அமல்படுத்த வேண்டும். விற்பனை அடிப்படையில் ஊழியர் எண்ணிக்கை நிர்ணயிக்க வேண்டும்.
டாஸ்மாக் நிறுவனத்தில் காலிப் பணியிடங்களை, தற்போதைய ஊழியர்களை கொண்டு நிரப்ப வேண்டும். மேலும், மொத்தமாக ஒன்பது அம்ச கோரிக்கைகள் சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு, அதற்கான அறிவிப்பு அரசால் வெளியிடப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.