சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் பெ.மணியரசன் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்தரங்கம் நிகழ்சியில் நாம் தமிழர் மாநில ஒருங்கினைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.
முன்னதாக காரில் வந்த அவர் பத்திரிக்கையாளர்களை பார்த்து என்னப்பா வந்துட்டாங்க நான் வேற எதாவது சொல்ல பஞ்சாயத்து பால்டாயில் குடிக்க சொன்னதாயிடுமே என சொல்லி சிரித்தார்.

பின்னர், பேசிய அவர் நீட் தேர்வில் உயிரிழந்த மாணவர்களுக்கு அதிமுக கட்சியினர் அஞ்சலி செலுத்தியது குறித்து கேட்டபோது, அஞ்சலி செலுத்தியதற்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன், தேர்தல் நேரத்தில் பாட்டு, கூத்து, தெருக்கூத்து போல பல நடக்கும் பார்த்துவிட்டு போகவேண்டியது தான் என்றார்.
பாஜக-அதிமுக கூட்டணி குறித்து அதில் சேர அழைப்பு குறித்து கேட்டதற்கு கூட்டணி ஆட்சியோ, கூட்டாட்சியோ நான் கேட்பது நல்லாட்சி அவர்கள் கூப்பிடுகிறார்கள் நல்லாட்சியை நான் கேட்கிறேன் ஒரு ஒரு முறையும் கேட்கிறார்கள் என்றார்.
நாட்டில் ஒரு ஒரு பிரச்சினைக்கும் நீதி மன்றத்தை நாடவேண்டியுள்ளது. பாஜக எம்.பி கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர் நிதிமன்றத்தால் தான் உத்திரவிட்ட பின்னர் அதனை அமுல் படுத்துகிறார்கள் நாடாளுமன்றத்தில் தீர்வே கிடைக்கவில்லை என்றார்.
வக்பு வாரிய திருத்த சட்டத்தில் மாற்று மதத்தினர் இருப்பது எப்படி அப்படி என்பதால் தான் பிரச்சினை எழுகிறது என்றார்.








