நாகை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் மாபெரும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் மாவட்ட நீதி மதியம் ஆன கந்தகுமார், போக்ஸ் நீதிபதி கார்த்திகா ஆகியோர் தலைமை தாங்கினார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் ஆகாஷ் கலந்து கொண்டு ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார். இதில் நாவல், புங்கன், வேம்பு, நீர்மருது, வேங்கை உள்ளிட்ட மரக்கன்றுகள் இடம்பெற்றன. இதன் தொடர்ச்சியாக கீழ்வேளூர் நீதிமன்ற வளாகம், அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகம் உள்ளிட்ட இடங்களிலும் மரக்கன்று நடப்பட்டது.