• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

தொழிலதிபர் கருமுத்து டி.சுந்தரத்தை மீட்ட காவல்துறையினர்..,

ByKalamegam Viswanathan

Apr 19, 2025

மதுரை மாநகர் பீ.பி.குளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் இவருக்கு திருமணமாகத நிலையில் தனியாக வசித்துவருகிறார். மதுரையில் உள்ள பிரபல மில் உரிமையாளரின் உறவினருமான கருமுத்து டி. சுந்தரம் மதுரை பைபாஸ் சாலையில் ஆட்டோமொபைல் உபகரணங்கள் விற்பனை நிறுவனம் நடத்திவருகிறார்.

இவருக்கு மதுரை, தென்காசி, திண்டுக்கல் ஆகிய பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான சொத்துகள் உள்ளது. இதனிடையே கருமுத்து டி.சுந்தரத்திற்கு சொந்தமான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 6 ஏக்கர் நிலம் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவந்துள்ளது.

இந்நிலையில் கருமுத்து டி. சுந்தரத்தை எதிர்தரப்பினர் நிலம் தொடர்பாக கடந்த 6 ஆம் தேதியன்று பீ.பி.குளம் பகுதியில் உள்ள வீட்டிற்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சுந்தரத்துடன் அவரது கடை ஊழியர்கள் இருந்தபோதும் பேச்சுவார்த்தைக்காக அழைத்துசெல்வதாக கூறி சுந்தரத்தை 10க்கும் மேற்பட்ட நபர்கள் காரில் அழைத்துசென்றுள்ளனர்.

பின்னர் இரவு ஆகியும் சுந்தரம் வீடு திரும்பாத நிலையில் சுந்தரத்தை காணவில்லை எனவும், சிலர் காரில் கடத்திசென்றதாகவும் தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படைகளை அமைத்து கடத்தப்பட்ட சுந்தரை தேட தொடங்கினர். சுந்தரத்தின் வீட்டின் அருகேயுள்ள சிசிடிவி கேமிராக்கள. மற்றும் வாகன பதிவெண்கள் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் கடத்தலில் தொடர்புடையதாக நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்த அருள்செல்வம், நாகப்பட்டினத்தை சேர்ந்த ஜனநேந்திரன், முத்துகிருஷ்ணன்,விக்னேஷ், தென்காசியை சேர்ந்த அருண் , திண்டுக்கல்லை சேர்ந்த மரியராஜ் ஆகிய 6 பேரை சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை தனிப்படையினர் தீவிரமாக தேடிவந்த நிலையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் கருமுத்து டி.சுந்தரத்தின் சகோதரி விசாலாட்சி கனடாவில் இருந்தபடி தனது சகோதரரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூகவலைதளம் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் கடத்தல் வழக்கில் தொழிலதிபர் கருமுத்து டி.சுந்தரத்தை நாக்பூரில் கடத்தி வைத்திருப்பதை கண்டுபிடித்த தனிப்படை காவல்துறையினர் அவரை மீட்பதற்க்காக பின் தொடர்ந்தபோது அதனையறிந்த கடத்தல் கும்பலானது மதுரையை நோக்கி காரில் சென்றுள்ளனர்.

இதன் பின் கடத்தல் கும்பலை ரகசியமாக பின்தொடர்ந்த காவல்துறையினர் மதுரை திருச்சி பைபாஸ் சாலையில் பாண்டிகோவில் ரிங்ரோடு அருகே காரை மடக்கியுள்ளனர். அப்போது கடத்தல் கும்பலை சேர்ந்த மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த அழகுராஜா, கிரி ராஜா ஆகிய இருவரும் கருமுத்து டி.சுந்தரத்தை காரில் விட்டுவிட்டு தப்பியோடினர். அப்போது தொழிலதிபரை மீட்ட காவல்துறையினர் கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் பிடிக்க முயன்றபோது காரில் இருந்து இறங்கி தப்பியோடியினர். அப்போது அங்கிருந்த மேம்பாலம் ஒன்றில் இருந்து குதித்தபோது அழகுராஜா, கிரிராஜா இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் இருவரையும் கைது செய்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் மீட்கப்பட்ட தொழிலதிபர் கருமுத்து டி.சுந்தரமும் உடல்பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மதுரையில் கடந்த 6ஆம் தேதி பிரபல தொழிலதிபரான கருமுத்து சுந்தரம் கடத்தப்பட்ட வழக்கில் இரண்டு வாரத்திற்குப் பின்பு குற்றவாளிகளை கைது செய்து தொழிலதிபரை மீட்ட ஆய்வாளர் மாடசாமி தலைமையிலான தனிப்படை காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பாராட்டுகளை தெரிவித்தார்.