• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

பொன்முடியின் ஆபாசக்கருத்தை மு.க.ஸ்டாலின் ஆதரிக்கிறாரா? ஆர்.பி.உதயகுமார் கேள்வி…

ByKalamegam Viswanathan

Apr 19, 2025

மக்கள்மன்றமும், நீதிமன்றமும் கண்டணம்தெரிவித்த பிறகும் பொன்முடியின் ஆபாசக்கருத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரிக்கிறாரா? பொன்முடி மீது நடவடிக்கை எடுப்பதற்கு தயங்குவது ஏன்? சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கின்ற அமைச்சர் பொன்முடி குறித்து கடும் கொந்தளிப்பில் ஒட்டுமொத்த தமிழினமும், இன்றைக்கு இந்த அரசின் மீது கடும் கோபத்தில் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

சைவம், வைணவம் சமயங்கள் பெண்கள் குறித்து இழிவான பேச்சை இதுவரை இந்த தமிழினம் கேட்டதில்லை. சைவம், வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நீதி அரசர்களே உத்தரவுயிட்டுகிறார்கள் .

இன்றைக்கு முதலமைச்சர், வனத்துறை அமைச்சர் பொன்முடியின் இந்த பேச்சை கேட்டதற்கு பிறகும், அவர் எப்படி இதை சகித்துக் கொள்கிறார். இதை எப்படி கடந்து போகிறார்? இது எப்படி ஏற்றுக் கொள்கிறார்? என்று தமிழ்நாட்டு மக்களுடைய மனம் எல்லாம் நொந்து போய் இருக்கின்றார்கள். உடனடியாக அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டாமா? குற்றம் செய்வது மட்டுமல்ல அந்த குற்றத்திற்கு ஆதரவு தெரிவிப்பது ஒரு குற்றம் தானே?

புரட்சித்தலைவர் அம்மா இதே இடத்தில் முதலமைச்சராக இருந்திருந்தால் குற்றம் புரிபவர்களை ஒரு நொடிப்பொழுது கூட அவர் அமைச்சரவிலே ஏன் அடிப்படை உறுப்பினராக கூட அவர் தொடர முடியாது என்ற நடவடிக்கை எடுத்திருப்பார்.

இவ்வளவு தவறுகள் செய்து விட்டு ஏதும் நடைபெறாது போல நீங்களும் சட்டமன்றத்திலே, பொது நிகழ்ச்சிகளிலே கலந்து கொள்கிறீர்கள் அவரும் சட்டமன்றத்திலே, பொது நிகழ்ச்சிகளிலே அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் இது வெட்கி தலைகுனிய வேண்டிய ஒரு நிகழ்வு அல்லவா?

ஆகவே முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி காபாற்ற, தெரிந்தும் தெரியாத போல நடிக்கின்றாரா என்று தெரியவில்லை, ஆகவே இன்றைக்கு வில்லை விட்டு புறப்பட்ட அம்பு போல பெருவாரியான மக்களுக்கு சென்று இந்த செய்தி சென்று விட்டது. இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று நீதியரசர்கள் கருத்து தெரிவிக்கின்றார்.

இதுபோன்று பேச்சை வேறு யாராவது பேசி இருந்தால் இதற்குள் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒருவர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்பதற்காகவே, திமுக கட்சி ஆளுகிற கட்சி சேர்ந்தவர் என்பதற்காகவே அவர் எதையும் சொல்லலாம் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தக்கூடாது.

எதிர்காலத்திலே இதுபோல கருத்துக்களை மக்கள் முன் பேசவும் துணிய கூடாது. அவ்வாறு பேச தயங்க வேண்டும். ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் யாராக இருந்தால் எதையும் பேச முடியும் என்கிற எண்ணத்தை ஒருபோதும் கொடுக்கக் கூடாது. சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்று நீதி அரசர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

மற்றவர்களின் மன வெறுப்பு பேச்சுகளை அரசு கடுமையாக நடவடிக்கைகளை எடுக்கும் போது, அவர்களின் சொந்த கட்சியை சேர்ந்த ஒருவர் அத்தகைய கருத்துக்களை தெரிவிக்கும் போது, அதே நடவடிக்கை தான் எடுக்கப்பட வேண்டும்.

அரசின் ஒரு அங்கமாக இருக்கும் ஒருவர் அமைச்சர் அவ்வாறு பேசும்போது, அதே நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் அமைச்சர் கூறியது, சாதாரண விஷயம் அல்ல என்று நீதியரசர் சொல்லி உள்ளார். அதைத்தான் எடப்பாடியார் சட்டமன்றத்தில் பேச அனுமதி கேட்டபோது அனுமதி மறுத்தார்கள்.

இன்றைக்கு தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்தி, பெண் குலத்திற்கு களங்கத்தை ஏற்படுத்திய இந்த வெறுப்பு பேச்சுக்கு வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் ஏனென்றால் இது போன்ற வெறுப்பு பேச்சுக்கு தாமாகவே வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அவ்வாறு இருக்கும் போது அதை அமுல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்துநீடித்தால்
முதலமைச்சர் ஸ்டாலினும், பொன்முடி செய்த தவறை, விமர்சனத்தை, கருத்தை அவருடைய பேச்சை இவரும் ஆமோதித்து இருக்கிறாரா? பொன்முடி கருத்தே ஸ்டாலின் கருத்து என்று ஆவோதிக்கிறாரா என்பது தான் இன்றைய பெண்களுடைய தீர்க்கமான முடிவாக இருக்கிறது.

இன்றைக்கு பெண் இனத்தையே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையிலே கருத்து தெரிவித்த பொன்முடியும் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் திமுக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று சொன்னால், வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலே, பெண்கள் வாக்குசாவடிகளில்,ஒரு வாக்குகள் கூட திமுகவுக்கு நீங்கள் அளிக்காமல் திமுகவை முற்றிலுமாக புறக்கணித்து, இது போன்ற இனி செயல்களில் ஈடுபடுகிற ,அவதூறு பேச்சுகளிலே ஈடுபடுகிற, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பாடம் புகட்ட ஒரே வழி நாம் அவர்களை புறக்கணிக்க வேண்டும் தேர்தல் களத்திலே, பெண்ணிமே உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற இந்த அவமானத்தை உடைத்து ஏறிவதற்கு, உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற காயத்திற்கு மருந்து தான் தேர்தல்.

இந்த வரலாற்று பிழையான கருத்துக்களை துடைத்து ஏறிவதற்கு களங்கத்தை தூக்கி எறிவதற்கு நமக்கு இருக்கிற ஒரே ஆயுதம் தேர்தல், திராவிட முன்னேற்றக் கழகத்தை 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பெண்கள் வாக்குச்சாவடியில் முற்றிலுமாக திமுகவை புறக்கணிக்கப்பட்டது என்பதை உலகத்துக்கு சொல்லுகிற செய்தியாக, இந்திய திருநாட்டுக்கு சொல்லுகிற ஒரு செய்தியாக ,எங்கள் பெண்களை, தாயைப் பழித்தால் தலை போனாலும் நான் விடமாட்டேன் என்று சொல்லுகிற அந்த சொல்லுக்கு உயிர் கொடுக்கின்ற வகையிலே, என் இனத்தை பழித்தால் அவர் எவராயினும் மன்னிக்கவுவார் என்ற வரலாற்றை இந்த தமிழ்நாட்டிலே பெண்கள் உருவாக்க வேண்டும்.

அப்படி உருவாக்க நாம் தவறுவிட்டால் இதுபோன்று கருத்துக்களை, பேச்சுக்களையும் நகைச்சுவை என்கிற பேரிலேயே சொல்வதற்கு இன்னும் ஆயிரம் ஸ்டாலினும், ஆயிரம் பொன்முடியும் உருவாகி வந்துவிடுவார்கள் அப்போது நாம் தடுக்க முடியாது ஆகவே ஆரம்ப நிலையில் இதை கிள்ளி எறிய வேண்டும். முற்றிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை புறக்கணிப்பது தான் ஒரே தீர்வு.

பத்தாவது வார திண்ணை பிரச்சாரத்தில் கழக அம்மா பேரவையினுடைய தொண்டர்கள், புரட்சித்தமிழர் எடப்பாடியார் சட்டமன்றத்தில் முன்வைத்திருக்கிற அந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் கருத்துக்களையும், மாண்புமிகு நீதிஅரசர்கள் தெரிவித்திருக்கிற அந்த கருத்துக்களையும், இந்த அரசின் மீது நீதிமன்றமும், மக்கள் மன்றமும் இன்றைக்கு வைத்திருக்கிற இந்த கடும் கண்டனத்தை மக்கள் மன்றத்திலே முழுமையாக எடுத்துச் செல்வேண்டும்.பெண்களுக்கு ஏற்பட்ட இந்த களகத்தை போக்கி அவர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருக்கும் வகையில் எடப்பாடியார் தலைமையில் அம்மாவின் புனித ஆட்சி மலரும் என கூறினார்.