பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வடக்கலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கத்தாழை மேடு கிராமத்தில் வசித்து வரும் கருப்பையா என்பவரின் 7 லட்சம் மதிப்பிலான ஆடுகள் மாயம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இக் கிராமத்தில் கருப்பையா மற்றும் அவரது மனைவிசெல்வி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவர்கள் சொந்தமாக ஆடு வளர்ப்பதை தொழிலாக கடந்த 12 ஆண்டுகளாக செய்து வருகின்றனர் அவர்களிடம் 58-ம் செம்பரி ஆடும் 10 வெள்ளாடு என மொத்தம் 68 ஆடுகள் வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 7 .15 மணியளவில் ஆடுகளை மேய்த்து அய்யனார் கோவில் பின்புறம் உள்ள அவரது சொந்த நிலத்தில் கூண்டு போட்டு அடைத்துவிட்டு வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் 9.15 மணி அளவில் தனது சொந்த நிலத்தில் அடைத்துள்ள ஆடுகளை பார்க்கும் போது அடைத்த இடத்தில் ஆடுகள் ஒன்றுமே இல்லாததால் திடீரென அதிர்ந்து போனனர்.
இது சம்பந்தமாக கத்தி கதறி ஊர் பகுதி வந்து சொல்ல பொதுமக்கள் மற்றும் ஆட்டின் உரிமையாளர் போலீஸிடம் புகார் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் போது இதன் மதிப்பு சுமார் 7 லட்சம் இருப்பதாக கூறியுள்ளனர்.