• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

பேருந்துகளை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து அபராதம்!!

BySeenu

Apr 17, 2025

கோவையில் அதிக ஒலி எழுப்பக் கூடிய ஏர் ஹாரன் பொருத்தப்பட்ட தனியார், அரசு பேருந்துகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து அபராதம் விதித்தனர்.

கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிக ஒளி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன் பொருத்தப்பட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் பேருந்துகளை இயக்குவதாக தொடர்ந்து பொதுமக்களிடம் புகார்கள் வந்தன.

இந்நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். அதில் 90 டெசிபலுக்கு அதிகமாக ஒலி எழுப்பும் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பொருத்தப்பட்ட ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டது. வாகனங்களில் ஏர் ஹாரன் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் போக்குவரத்து துறை அதிகாரிகள் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் என ஏர் ஹாரன் பொருத்திய வாகனங்கள் குறித்து ஆய்வு செய்வதாகவும், அதிக ஒலி எழுப்பக் கூடிய ஏர் ஹாரன் இடையூறுகள் அதிகமாக இருந்த காரணத்தினால் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராத தொகையானது 3000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாய் வரை விதிக்கப்பட்டு வருவதாக வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.