• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

மீண்டும் அதிமுக பொதுச்செயலாளர் என அறிக்கை…

Byகாயத்ரி

Dec 2, 2021

அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு சசிகலா மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அநீதியை எதிர்த்தும், துரோகத்தை வீழ்த்தியும் தோன்றியதுதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இந்த பேரியக்கம். இது உயிர்த் தொண்டர்களின் உழைப்பாலும், இயாகத்தாலும் உருவான ஒரு இயக்கம். நம் புரட்சித்தலைவரும், தன்னை ஒரு முதல் தொண்டனாக கருதி முன்னின்று, எத்தனையோ சூழ்ச்சிகளையும், தடைகளையும் தாண்ட, வென்று எடுத்த ஒரு மாபெரும் இயக்கம்.இது உயிர்த்தொண்டர்களின் உழைப்பாலும், தியாகத்தாலும் உருவான இயக்கம்.

நம் இயக்கத்தில் எத்தனையோ ஆற்றல்மிகு நிர்வாகிகள், திறமைமிக்க செயல்வீரர்கள், செயல்வீராங்கனைகள், கழகத்தை தங்கள் உயிர் மூச்சாக எண்ணி, வாழ்ந்துக் கொண்டு இருக்கும் தொண்டர்கள் என ஏராளமானோர் இன்றைக்கும் கழகத்தின் வளர்ச்சி மட்டுமே தங்கள் வாழ்வின் இலட்சியமாக கருதி, கழகம் மீண்டும் அதே பொலிவோடு பழைய நிலைக்கு வர வேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்து தங்கள் வாழ்க்கையை நம்பிக்கையோடு வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்.

சிலரது தேவைகளுக்காகவும், விருப்பு வெறுப்புக்காகவும் அதிமுக தற்போது செயல்படுகிறது.அதிமுகவிலிருந்து ஒதுக்கப்பட்டவர்கள், ஒதுங்கியவர்கள் கவலைப்படாமல் பொறுமை காக்கவும்.அதிமுகவின் நிலை விரைவில் மாறும், தலை நிமிரும்.உண்மைகளும், நியாயங்களும் என்றைக்கும் தோற்றதாக சரித்திரம் இல்லை. எத்தனை இடர்பாடுகள் ஏற்பட்டாலும் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து என் உயிர்மூச்சு உள்ளவரை நம் இயக்கத்தை காத்து, தொண்டர்களின் இயக்கமாக மாற்றும் வரை நான் உழைத்துக்கொண்டே இருப்பேன், ஓய்ந்துவிட மாட்டேன் – சசிகலா.