ஆளுநர் விவகாரத்தில் சென்னை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று, தேனி மாவட்டம் கம்பத்தில் நகர திமுக சார்பில். வெடி வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
தமிழக ஆளுநர் என்.ஆர். ரவி அனுமதி தராமல் நிறுத்தி வைத்திருந்த, 2020ம் ஆண்டு தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த மசோதா, 2020ம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் திருத்த மசோதா, 2022ம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் மசோதா, 2022ம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மசோதா, 2022ம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை திருத்தச் சட்ட மசோதா, 2022ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா, 2022ம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் இரண்டாம் திருத்தச் சட்ட மசோதா, 2022ம் ஆண்டு தமிழ் பல்கலைக்கழக இரண்டாம் திருத்தச் சட்ட மசோதா, 2023ம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா, 2023ம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்குகள் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா ஆகிய மசோதாக்களுக்கு உடனே அனுமதி வழங்க உத்தரவிட கோரி, தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்த நிலையில், தமிழ்நாடு பல்கலை சட்ட திருத்த (2ஆவது) மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. மேலும், ஆளுநருக்கு என தனிப்பட்ட அதிகாரங்கள் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்ததை வரவேற்றும், பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் நீக்கம் செய்யப்பட்டதை வரவேற்றும் கம்பம் நகர திமுக சார்பில், நகர செயலாளர்கள் (வ)எம்.சி வீரபாண்டியன், (தெ) சி பால்பாண்டி ராஜா தலைமையில் கம்பம் காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக வந்த கட்சியினர், தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என கோஷம் எழுப்பியவாறு சிக்னல் பகுதிக்கு வந்தனர். அங்கு வேட்டு வெடித்து, இருசக்கர வாகனங்கள் மற்றும் பஸ்களில் வந்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.

நிகழ்ச்சியில் மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர் இரா பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் குரு குமரன், இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் டிஸ்கோ அலாவுதீன் உட்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.
