• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தேனியில் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை. மேலும் கூடுதலாக 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

2019ஆம் ஆண்டு தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் அவரது மனைவி அங்காள ஈஸ்வரியின் மீது நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த பிரச்சினையில், கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கண்ணன் வெட்டி படுகொலை செய்தார்.

இதனைத் தொடர்ந்து சின்னமனூர் காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந் நிலையில் இன்று வழக்கு விசாரணை முடிவுற்று கணவர் கண்ணன் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு, கண்ணனுக்கு ஒரு ஆயுள் தண்டனை, 5000 ரூபாய் அபராதம் ,கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு மெய்க்காவல் சிறை தண்டனை மற்றும் மனைவியை சந்தேகப்பட்ட குற்றத்திற்காக மேலும் 5 ஆண்டு சிறை தண்டனை, 5000 ரூபாய் அபராதம் அபராத தொகையை கட்ட தவறினால் ,மேலும் ஆறு மாத கால சிறை தண்டனை விதித்தும் ,இத்தண்டனை முழுவதையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெ.வெங்கடேசன் தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து குற்றவாளி கண்ணனை மதுரை மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் கூட்டிச் சென்றனர்.