திமுகவுக்கு 9 மாத காலம் மட்டுமே ஆட்சி காலம் இருப்பதாகவும், அதன் பிறகு எதிர்க்கட்சி ஆக கூட திமுகவால் வர முடியாது என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
திமுக ஆட்சிக்கு வந்தால் பேரவை உறுப்பினர்களின் உரையாடல்கள் நேரலை செய்யப்படும் என வாக்குறுதி அளித்து, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை அதனை நிறைவேற்றாமல் இருப்பதாக குற்றம் சாட்டினார்.
குறிப்பாக தமிழக சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள எதிர்க்கட்சி தலைவருக்கு தான் முதலில் பேசுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டுமே தவிர, மற்ற எதிர்க்கட்சி தலைவர்களுக்கு முதலில் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கக்கூடாது என தெரிவித்தார்.
நேரமில்லா நேரத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக சார்பில் கேள்வி எழுப்ப முற்பட்ட பொழுது, தனக்கு வாய்ப்பளிக்காமல், பிற கட்சிக்கு வாய்ப்பு அளிப்பது என்ன நியாயம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.
குறிப்பாக நடைபெற்று வரும் பேரவை கூட்டத் தொடரின் போது கவனயீர்ப்பு தீர்மானத்தில் உரையாற்றிய சி. விஜயபாஸ்கர், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியுள்ளது உரையாடல்களை நேரலை செய்யாமல், இருட்டடிப்பு செய்ததாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை நேரலை செய்யாமல், அமைச்சர்களும், முதலமைச்சரும் பேசுவதை மட்டும் நேரலை செய்வதினால் மக்களுக்கு எப்படி புரியும் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பேச முற்பட்ட தங்களை அவையிலிருந்து வெளியேற்றம் செய்துவிட்டு, தமிழக முதலமைச்சர் தங்களை அவதூறாக பேசியிருப்பது கோழைத்தனத்தின் உச்சம் எனவும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி கூறினார்.

அதிமுக உறுப்பினர்கள் அவையில் இல்லாத பொழுது, தங்களைப் பற்றி சிறுமைப்படுத்தும் விதத்தில் பேசியிருப்பதாக குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர், தமிழக முதலமைச்சருக்கு தைரியம், தெம்பு, திராணி இருந்தால் தங்களை பேரவையில் வைத்துக் கொண்டு இது போல் பேச முடியுமா என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி, திமுகவுக்கு இன்னும் ஒன்பது மாதங்கள் மட்டுமே காலம் உள்ளது என்றும், அதன் பிறகு எதிர்க்கட்சியாக கூட திமுகவால் வர முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவோடு மகத்தான வெற்றியை அதிமுக பெற்று, ஆட்சி அமைக்கும் என்றும் எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்தார்.
திமுகவின் கூட்டணி கட்சிகள் அடிமை போல் நடத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஆட்சியில் இல்லாத போது தமிழக வந்த பிரதமருக்கு கருப்பு கோடி காண்பித்து விட்டு, ஆட்சியில் அமர்ந்ததும் வெண்கொடை பிடித்தவர் தான் தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி விமர்சித்தார்.