• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

என்னது கொரோனாவுக்கும் டெங்குவுக்கும் தொடர்பு உண்டா?

Byமதி

Dec 1, 2021

நாடாளுமன்றத்தில் தற்போது குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளித்து வருகிறது.

உறுப்பினர் ஒருவர் கொரோனாவுக்கும் டெங்குவுக்கும் நேரடி தொடர்பு உண்டா? – என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்,நாட்டில் ஏற்படும் டெங்கு பாதிப்பை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், கடந்த 2019-ம் ஆண்டு டெங்கு பாதிப்பு 2,05,243 ஆக இருந்த நிலையில் 2021-ம் ஆண்டு 1,64,103 ஆக குறைந்துள்ளது. டெங்கு பாதிப்பு காரணமாக 2008ம் ஆண்டு 1% குறைவாக உயிரிழப்பு பதிவான நிலையில் 2019 ஆம் ஆண்டு 0.1% ஆக உயிரிழப்பு குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா பெருந்தொற்றுக்கும் – டெங்கு பாதிப்பிற்கும் நேரடி தொடர்புகள் இருப்பதாக எவ்வித அறிவியல் பூர்வமான முடிவுகளும் இல்லை என்று மாநிலங்களவையில் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.