மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தேரிழந்தூர் கிராமத்தில் இஸ்லாமிய ஜமாத்தார்கள் சார்பில் இதயங்கள் இணையும் சமூக நல்லிணக்க பெருநாள் சந்திப்பு விழா நடைபெற்றது.

விழாவில் இந்து கிறிஸ்தவ முஸ்லிம் மதபோதவர்கள் பங்குபெற்று அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். மதத்தால் நாம் பிரிக்கப்பட்டுள்ளோம் எல்லோருக்கும் உடல் உள்ளமைப்பும் வெளிய அமைப்பும் ஒன்றுதான் எல்லோரும் நல்வழியில் செல்ல ஒன்றிணைந்து சாதி மதத்திற்கு அப்பால் வாழ்வோம் என்றும் பேசினார்கள்.