விருதுநகர் மாவட்டம் கோவில் திருப்பணிக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ரூ.1இலட்சம் நிதி வழங்கினார்.
சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை தாலுகா ஏழாயிரம்பண்ணை ஊராட்சியில் தேவர் நகர் உள்ளது . இங்கு மூன்று சமூகத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீஅதிர்ஷ்ட ஈஸ்வரி காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு, முன்னதாக திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. திருப்பணிக்கு நிதி உதவி வழங்க வேண்டுமென கும்பாபிஷேக கமிட்டி சார்பில், அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதனை ஏற்று ரூ.1இலட்சம் நிதியுதவி வழங்கி கும்பாபிஷேக ஏற்பாடுகளை சிறப்பாக செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.
