• Fri. Sep 19th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

நகர மைய நுாலகத்திற்க்கு ரூபாய் 25 லட்சம் மதிப்பில் புத்தகங்கள்..,

BySeenu

Apr 5, 2025

கோவை மாநகராட்சி பொது அறிவு சார் மையம் மற்றும் நகர மைய நுாலகத்திர்க்கு ரூபாய் 25 லட்சம் மதிப்பில் புத்தகங்கள் வழங்கள் இன்னர்வீல் கிளப் சார்பில் வழங்கப்பட்டது.

கோவை இன்னர்வீல் கிளப் மாவட்டம் 320, சமுதாய சேவை, திறன்மேம்பாடு மற்றும் சமுதாய மாற்றங்களுக்காகவும் அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. கோவை இன்னர்வீல் கிளப், கோவை ஆடிஸ் வீதியில் உள்ள மாநகராட்சி பொது அறிவு மற்றும் நகர மைய நுாலகங்களுக்கு 500 புத்தகங்களை இன்று வழங்கியுள்ளது. இவ்வமைப்பு ஏற்கனவே 3500 புத்தகங்களை வழங்கியுள்ளது.

இவை, மத்திய போட்டி தேர்வு அளவிலான புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் ஆகும். மேலும் இன்னர் வீல் அமைப்பு 15 கணிணிகளையும் வழங்கியுள்ளது. இந்த முயற்சிக்கு கோவை இன்னர்வீல் கிளப் உறுப்பினர்கள் மட்டுமின்றி, குஜராத்தி ஜெயின் சமாஜ், குஜராத்தி கேடியா பவன் ஆகியவையும் இணைந்து ஆதரவு வழங்கியுள்ளன.

இந்த நிகழ்ச்சி கோவை மாநகராட்சி உதவி கமிஷனர் செந்தில்குமரன், எங்களது மதிப்பிற்குரிய மாவட்டம் 320 தலைவர் ஜக்ருதி அஸ்வின் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதுவரை இந்த புத்தகங்களால் 37000 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். 16 மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெற்று வண்ணமயமாக ஜொலிக்கின்றனர்.
இந்த நிகழ்வுக்கு ஆதரவளித்து நன்கொடை வழங்கியவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கோவை இன்னர்வீல் கிளப் மேற்கொண்ட இந்த முயற்சி மேலும் பலருக்கு பேருதவியாக இருக்கும். நன்கொடை வழங்க சரியான நுாலகங்களை தேர்வு செய்த டாக்டர் கலாம் பவுண்டேஷன் கிஷோர் அவர்களுக்கு சிறப்பான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைவர்: பல்குணா ஹரேஷ் பதானி
செயலாளர் : பினால் எஸ் ஷா
இன்று வழங்கப்பட்ட திட்டத்தின் மதிப்பு ரூபாய் 25 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.