தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்த அருவிக்கு கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து நீர்வரத்து இருக்கும்.
இந்நிலையில், நேற்று இரவு கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வட்டக்கானல் மற்றும் வெள்ளைக்கவி மலையில் கனமழை பெய்தது.
இதனால் கும்பக்கரை அருவியில் நிர்வரத்து அதிகரித்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிக்க இன்று நமதியம் 02.30 மணிக்குமேல் வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.