• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை

Byவிஷா

Apr 2, 2025

புதிய பாம்பன் பாலத்தை ஏப்.6ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திரமோடி வருகை தருவதை முன்னிட்டு, ராமேஸ்வரம் மீனவர்கள் மூன்று நாட்கள் மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் 6 ஆம் தேதி ராமேஸ்வரம் வருவதை அடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 5 ஆம் தேதி இலங்கை செல்லும் அவர், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதன் பிறகு ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
பிரதமர் வருகையை ஒட்டி, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏப்ரல் 4 முதல் 6 வரை மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாம்பன் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள விசைப் படகுகள் மற்றும் நாட்டு படகுகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ராமேஸ்வரம் முழுவதும் பிரதமரின் பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.