• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

5000-கும் மேற்பட்ட ஆண்கள்,சிறுவர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை..,

ByAnandakumar

Mar 31, 2025

பள்ளப்பட்டியில் நகர ஐக்கிய ஜமாத் சார்பில் நடைபெற்ற ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை 5000-கும் மேற்பட்ட ஆண்கள்,சிறுவர்கள் கலந்து கொண்டனர்.

ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் 30 நாட்கள் முஸ்லிம்கள் நோன்பு இருந்து அல்லாவை மனம் உருகி வழிபடுவர். நோன்பின் முடிவில் ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நகர ஐக்கிய ஜமாத் சார்பில் ஈத்கா திடல் மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 5000-க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

ஏராளமான இஸ்லாமியர்கள் பெருநாள் திடல் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பெருநாள் சிறப்பு தொழுகை முடிந்து இஸ்லாமியர்கள் ஒருவொருக்கொருவர் கட்டியணைத்து கைகொடுத்தும், ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர்.
50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.