• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மக்கள் பணி முதல்வரின் வழியில் தொடரும் என அமைச்சர் மூர்த்தி பேட்டி..,

ByKalamegam Viswanathan

Mar 29, 2025

மதுரை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படி மக்களின் தேவைகளை அறிந்து பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தந்துள்ளோம்.

அதன்படி மதுரை மாநகருக்கு 140 கோடி நிதி ஒதுக்கப்பட்டு என்னென்ன வசதிகள் தேவை என்பதை அறிந்து எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் நிறைவேற்று வருகிறோம் அதன் வரிசையில் வார்டு 80 81 82 83 ஆகிய வார்டுகளில் ஒரு கோடி35 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கான பணிகளும் மதுரை பழங்காநத்தம் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 25 லட்சம் மதிப்பீட்டில் இளைஞர்கள் விளையாட கூடிய உள் விளையாட்டு அரங்கமும் 10 லட்சம் மதிப்பீட்டில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.

70-வது வார்டில் இரண்டு கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்பட உள்ளன அதன்படி மக்களுக்கான தேவைகள் அனைத்தையும் அறிந்து மக்களின் முதல்வராக இருக்கக்கூடிய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் எங்களுக்கெல்லாம் அறிவுறுத்தி உள்ளது. மக்களுக்கான தேவைகளை முன் நின்று செய்ய வேண்டும் என்பதுதான்.

அதன்படி மதுரை மேற்கு தொகுதிக்கு மட்டுமல்லாது மதுரை மாநகராட்சி முழுமைக்கும் குடிநீர் வசதி பாதாள சாக்கடை வசதி தெரு விளக்கு வசதி உள்ளிட்ட பணிகளை ஒட்டு மொத்த மதுரைக்கும் நிறைவேற்றி தர செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். தேர்தல் காலங்கள் வரும்போது எதிரிகளுக்கு எங்கள் பதிலை சொல்வோமே தவிர மக்களுக்கான தேவைகளை அறிந்து அதனை நோக்கி இடங்களை செயல்படுத்துவதே எங்களின் தற்போதைய நோக்கம் என்றார்.