• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பராமரிப்பு இல்லாத பேருந்தால் பாதி வழியில் இறக்கி விடப்பட்ட பயணிகள்..,

ByKalamegam Viswanathan

Mar 29, 2025

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரம் உள்ளசோழவந்தான் அடுத்து கரட்டுப்பட்டி செல்லும் பேருந்து பெரியார் பேருந்து நிலையத்தில் 5. 50 மணிக்கு புறப்பட்டு ஏழு மணிக்கு கரட்டிப்பட்டி சென்று சேர்வது வழக்கம் இந்த நிலையில் இந்த பேருந்தானது பராமரிப்பு இல்லாத நிலையில் காலாவதியான பேருந்தை இயக்கி வந்ததால்1.10 நிமிடத்தில் செல்ல வேண்டிய தூரத்தை 2 மணி நேரத்துக்கு மேலாகியும் சென்று சேராத அவல நிலை ஏற்பட்டது.

மேலும் இந்த பேருந்துக்காக மதுரையின் பல்வேறு பகுதிகளில் காத்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் இந்த பேருந்தில் ஏறியதால் பேருந்தை இயக்குவதற்கு ஓட்டுனர் மிகவும் சிரமப்பட்டு இயக்கி வந்ததாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கூறினர்.

  1. 50 மணிக்கு பெரியார் பேருந்து நிலையத்தில் எடுத்த பேருந்து ஒரு வழியாக 8 20 மணிக்கு சோழவந்தானை வந்தடைந்தது ஆனால் சோழவந்தானிலிருந்து 8கிலோமீட்டர் தூரம் உள்ள கரட்டுப்பட்டிக்கு பேருந்தை இயக்குவது சாத்தியம் இல்லாததை உணர்ந்த ஓட்டுநர் சோழவந்தான் பேருந்து நிலையத்திலேயே பயணிகளை இறக்கி விட்ட அவல நிலை ஏற்பட்டது.
  2. பேருந்தில் இருந்து இறங்கிய பயணிகள் நாச்சிகுளம் கரட்டுப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு செல்வதற்கு மாற்று பேருந்து இல்லாத நிலையில் கூடுதலாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோழவந்தான் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர் பராமரிப்பு இல்லாத பேருந்துகளை இயக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் குறிப்பாக சோழவந்தான் பகுதியில் பல பேருந்துகளை பராமரிப்பு இல்லாத நிலையில் இயக்கி வருவதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக்கப்பட்டும்.
  3. மேலும் அடிக்கடி விபத்துகளால் பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வரும் நிலையில் போக்குவரத்து கழகங்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை என குற்றம் சாட்டுகின்றனர் ஆகையால் மதுரையில் புறநகர் பகுதிகளான கிராம பகுதிகளுக்கு இரவு நேரங்களில் செல்லும் பேருந்துகளை முறையாக பராமரித்து இடையில் நிற்காதவாறு பேருந்துகளை இயக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.