• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

நீச்சல் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல்..,

ByT.Vasanthkumar

Mar 28, 2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டரங்கத்திலுள்ள நீச்சல்குளம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும், நீச்சல் வீரர்களின் தினசரி பயிற்சிக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீச்சல் குளத்தில் நீந்த கற்றுக்கொள் திட்டத்தின் கீழ் (Learn to Swim Course ) 2025-ஆம் ஆண்டிற்கான சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது.

இந்தப் பயிற்சிமுகாம் 12 நாட்களுக்கு தொடர்ந்து நடத்தப்படவுள்ளது. முதல் வகுப்பு (Batch) 01.04.2025முதல் 13.04.2025 முடிய, இரண்டாவது வகுப்பு (Batch) 15.04.2025 முதல் 27.04.2025 முடிய, மூன்றாவது வகுப்பு (Batch) 29.04.2025 முதல் 11.05.2025 முடிய, நான்காவது வகுப்பு (Batch) 13.05.2025 முதல் 25.05.202 5முடிய, ஐந்தாவது வகுப்பு (Batch) 27.05.2025 முதல் 08.06.2025 முடிய நடைபெறவுள்ளது. இப்பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ள நாட்கள்.

பயிற்சி காலை நேரங்களில் 6.00 மணி முதல் 7.00 மணி வரை, 7.15 மணி முதல் 8.15 மணி வரை மற்றும் 8.30 முதல் 9.30 வரையும், மாலை நேரங்களில் 3.30 மணி முதல் 4.30 மணி வரை, 4.30 மணி முதல் 5.30 மணி வரை மற்றும் 5.30 மணி முதல் 6.30 மணி வரையும் நடைபெறும். பயிற்சி கட்டணம் ரூ.1,500 & (GST 18%). ஆகும்.பயிற்சி முகாமில் கலந்துகொண்டு நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த நீச்சல் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயரினை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் மாவட்ட விளையாட்டரங்க நீச்சல் குள வளாகம் – பெரம்பலூர் என்ற முகவரியில் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு 04328-299266 என்ற தொலைபேசி எண், 74017 03516 என்ற அலைபேசி எண் அல்லது நீச்சல் பயிற்றுநர் (88704 39645) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.