கரூரில் போக்குவரத்து காவலர்களுக்கு பொலியூசன் மாஸ்க், கூலிங் கிளாஸ், கூலிங் தொப்பியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா வழங்கினார்.
கோடை காலம் துவங்கி விட்டதால் பகல் நேரங்களில் கடும் வெயிலில் நின்று சாலையில் போக்குவரத்து சீர் செய்யும் காவலர்களுக்கு வெயிலின் தாக்கத்தை தணிக்கும் விதமாக அவர்களுக்கு பொலியூசன் மாஸ்க், கூலிங் கிளாஸ், கூலிங் தொப்பி வழங்கும் நிகழ்ச்சி கரூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா கலந்து கொண்டு போக்குவரத்து காவலர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களுக்கு மாஸ்க், கூலிங் கிளாஸ், நீர் மோர் வழங்கி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் உள்ளிட்ட காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.
இன்று தொடங்கி கோடை காலம் முடியும் வரை காவலர்களுக்கு நாள்தோறும் நீர் மோர், ரஸ்னா, ரோஸ் மில்க் உள்ளிட்ட குளிர் பானங்கள் நாள்தோறும் ஒன்று வழங்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.