கோவையில் உள்ள டான் போஸ்கோ அன்பு இல்லத்தில் இருந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய 25 மாணவர்களை ரவுண்டு டேபிள் அமைப்பைச் சேர்ந்த தனியார் அமைப்பினர் மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் 25 மாணவர்களை முதல்முறையாக விமானத்தில் அழைத்து வந்தனர்.

கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவர்களை பிர்லா கோளரங்கம் , VGP உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கல்வி சுற்றுலாவாக அழைத்துச் செல்கின்றனர்.
இதனை தொடர்ந்து இன்று மாலை மீண்டும் கோவைக்கு விமானத்தில் அழைத்து செல்ல இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் மாணவர்களிடம் இந்த பயணம் எப்படி இருந்தது என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு,
முதல் முறையாக விமானத்தில் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் விமானத்தில் வரும் பொழுது மேகக் கூட்டங்களை நேரடியாக அருகில் கண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும்,
தனது கனவுகள் நிறைவேற்றும் வகையில் யாருக்கும் கிடைக்காத இந்த பயணம் எங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் விமானத்தில் அழைத்து வந்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
