மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டார வேளாண்மைத்துறையின் வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசனம் குறித்த மாநில அளவிலான விவசாயிகள் பயிற்சியின் கீழ் உடுமலைபேட்டை ஜெயின் இரிகேசன் ரெட்டியார்சத்திரம் காய்கறிகள் மகத்துவ மையம், காந்திகிராமம் வேளாண் அறிவியல் நிலையம் ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டது.
இந்த பயிற்சியில் ஜெயின் இரிகேசன் நிறுவனத்தை சார்ந்த பண்ணை மேலாளர் முருகானந்தம் கரும்பு, மக்காச்சோளம், இதர பயிர்கள் மற்றும் பழ வகைகளில் எவ்வாறு சொட்டுநீர் பாசன முறை பயன்படுகிறது என்பதையும், அதன் நன்மைகள் பற்றியும், சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முறையினை பற்றியும் செயல்விளக்கத்திடல் மூலமாக விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

ஜெயின் இரிகேசன் நிறுவனத்தில் சொட்டு நீர் பாசன முறையில் பயிரிடப்பட்ட கரும்பு வயல் மா எலுமிச்சை, தென்னந்தோப்புகள் ஆகியவை விவசாயிகளுக்கு காண்ப்பிக்கப்பட்டது. ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் பிரகாஷ் உதவி தோட்டக்கலை அலுவலர் சொட்டுநீர் பாசன மூலமாக சாகுபடி செய்யப்படும் காய்கறிகள் குறித்து விவசாயிகளிடம் விளக்கினார்.
சதிஷ் இளநிலை ஆராய்ச்சியாளர் பாலி ஹவுசின் மூலமாக நாற்றுக்கள் தயாரிக்கும் முறைகள் பற்றி எடுத்துரைத்தார். நாற்றுக்கள் தயார் செய்யும் முறைகள் விவசாயிகளுக்கு நேரடியாக செயல்விளக்கமாக காண்ப்பிக்கப்பட்டது. காந்திகிராம வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனத்தின் பயன்பாடுகள் குறித்தும், செயல்விளக்கத்திடலில் கத்தரிக்காய் பயிரில் சொட்டுநீர் பாசன முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் நேரடியாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
இந்த பயிற்சிக்கு கள்ளிக்குடி, திருமங்கலம், தே.கல்லுப்பட்டி ஆகிய வட்டாரங்களை சேர்ந்த 40 விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனர். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்களான லாவண்யா மற்றும் யுவராஜ்குமரன் ஆகியோர் செய்திருந்தனர்.











; ?>)
; ?>)
; ?>)